திங்கள், 25 அக்டோபர், 2010
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு-4.49 கோடி வாக்காளர்கள்
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 கோடியே 49 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவள்ளதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 4 கோடியே 49 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் தபால் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, தாலுகா அலுவலகங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் விடுபட்டோர், முகவரி மாறஇயோர், 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்காக நவம்பர்9ம் தேதி வரை அவகாசம் தரப்படுகிறது. அந்த கால கட்டத்திற்குள் உரிய விண்ணப்பத்தை அளித்து தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
தட்ஸ்தமிழ்
0 comments:
கருத்துரையிடுக