திங்கள், 25 அக்டோபர், 2010

தாலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம்: யு.எஸ். தூதர்

தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த பல உயர்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஆர்வமாக உள்ளதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஹால்புரூக் தெரிவித்துள்ளார். "நேட்டோ" படையினரின் தீவிர நடவடிக்கை காரணமாக, ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள அமெரிக்க ஆதரவு அரசாங்கத்துடன் பேச்சு நடத்த உயர்மட்ட தாலிபான் தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயம் போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்காமல், ஆப்கான் அரசாங்கத்துடன் இதுவரை தாலிபன் தலைவர்கள் தொடர்புகளை மட்டுமே ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெப்துனியா 

0 comments:

கருத்துரையிடுக