வியாழன், 25 நவம்பர், 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நிரா ராடியாவிடம் 8 மணி நேரம் விசாரணை.


செல்போன் நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் கம்பெனிகளுக்கு புரோக்கராக செயல்பட்டதாக நிரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் புரோக்கராக செயல்படுபவர் நிரா ராடியா. இதுபற்றி அந்த துறையின் துணை இயக்குனர் பிரபாகாந்த் , நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
கம்பெனிகளுக்காக பரிந்துரையில் ஈடுபடும் தரகரான நிரா ராடியாவிடம் விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளோம். சில ஆவணங்களை தாக்கல் செய்வதாக அவர் உறுதி அளித்திருக்கிறார். அவற்றை அவர் விரைவில் அளிப்பார் என நம்புகிறோம். விசாரணைக்கு எப்போது அவசியமோ அப்போது நிராவை அழைக்க முடிவு செய்துள்ளோம் என்றார். டெல்லியில் உள்ள அமலாக்க பிரிவு இயக்குனரகத்துக்கு நிரா ராடியா நேற்று காலை 10.30 மணிக்கு வந்தார். மாலை 6.30 வரை அவரிடம் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர். 

0 comments:

கருத்துரையிடுக