ஈரானின் அணுசக்தி திட்டத்தை எவ்வாறாயினும் தடுக்கவேண்டும் என சவூதி மன்னர் அப்துல்லாஹ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்ததாக சவூதி அமெரிக்க தூதரகம் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு புரியவைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா தலைமையை கூட அமெரிக்க அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்ததாகவும் இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாமலிருப்பதற்காக செறியூட்டப்பட்ட யுரேனியத்தை பாகிஸ்தான் அணுசக்தி நிலையத்திலிருந்து திருடுவதற்கு கூட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்கள் இதில் தலையிடும் என்பதால் இந்த திருட்டு முயற்சி கைவிடப்பட்டது.
வடகொரியாவை தாக்குவதற்கு தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனாவிற்கு ஆசையூட்டி தங்களுடன் இணைய தென்கொரியா முயற்சித்தது. குவாண்டனாமோ சிறைக் கைதிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், பல நாடுகளும் இதனை எதிர்த்தன. சர்வதேச அளவில் கூகிள் உள்ளிட்ட இணையதளங்களை ஹேக் செய்யவும், சைபர் துறையில் இதர தாக்குதல்களுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகாரம் அளித்தது. சீன அரசு நியமித்த சட்டவிரோத நிபுணர்கள் உலகநாடுகள், தலாய்லாமா, அமெரிக்க வர்த்தகர்கள் உள்ளிட்டோரின் சைபர் அக்கவுண்டுகளும், இணையதளங்களும் ஹேக் செய்தனர்.
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சி.ஐ.ஏ அதிகாரியை கைதுச் செய்யக்கூடாது என ஜெர்மனியை அமெரிக்கா மிரட்டியது. ஆப்கானில் ஜெர்மனியைச் சார்ந்த குடிமகன் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரஷ்ய அதிபர் புடினுக்கும் இத்தாலி பிரதமரும் வர்த்தக மன்னனுமான சிலிவோ பெர்லஸ் கோணிக்குமிடையேயான தொடர்பு. சிலிவோவிற்கு உதவுவதற்காக புடின் ஏராளமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். ஆப்கான் துணை அதிபர் யு.ஏ.இக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது 5 கோடியே இருபது லட்சம் அமெரிக்க டாலர் கள்ள நோட்டுகளுடன் பிடிபட்டபொழுது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
விக்கிலீக்ஸ் மொத்தம் 250000 ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் 3038 ஆவணங்கள் டெல்லியிலுள்ளதாகும். 2278 காட்மாண்டுவிலுள்ளது. 3325 ஆவணங்கள் கொழும்புவிலிருந்தாகும். 2220 ஆவணங்கள் இஸ்லாமாபாத்திலுள்ளதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments:
கருத்துரையிடுக