திங்கள், 29 நவம்பர், 2010

வருமான வரி செலுத்த இனி 'DIN' அவசியம்.

இனி வருமான வரி செலுத்துவோர் ஆவண அடையாள எண் எனப்படும் (Document identification number) DIN எண்களைப் பயன்படுத்துவது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை வருமான வரித் துறைக்கு விண்ணப்பித்து வரி செலுத்துவோர் பெற்றுக் கொள்ளலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. PAN, TAN எண்களைப் போலவே இந்த DIN எண்களையும் இனி ஒவ்வொரு வருமான வரி பரிவர்த்தனையின்போதும் குறிப்பிடுவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2010-2011ம் ஆண்டுக்கான வருமான வரி செலுத்துவோர் தங்களின் வரி தொடர்பான அத்தனை ஆவணங்கள், கடிதங்களிலும் இந்த எண்ணைத்தான் குறிப்பிட்டாக வேண்டும் என மத்திய வருமான வரித்துறை இயக்குநர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. இந்த எண்களைப் பயன்படுத்துவதால் தவறுகள் குறையும் என்று அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சகம், இந்த எண்களை சம்பந்தப்பட்ட வருமான வரி செலுத்துவோருக்கு துறையின் மூலமே ஒதுக்கித் தருவார்கள் என்றும் கூறியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக