திங்கள், 22 நவம்பர், 2010

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் சுகாதார வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்’ என்ற பிரசாரத்தை முன்னிறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் சுகாதார வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் துவக்க நிகழ்ச்சியாக நேற்று சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்கள் விநி யோகம் செய்யப்பட்டன. மாவட்ட தலைWவர் பைசல் அகம்மது தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
இதன் தொடர்ச்சியாக வரும் 27ம் தேதி கோட்டார் இளங்கடை பாவாகாசிம் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமருத்துவம், காது மூக்கு தொண்டை பிரிவு பரிசோதனை, எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான பரிசோதனை, ரத்தம், கொழுப்பு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோ சனை வழங்கப்பட உள் ளது. 

0 comments:

கருத்துரையிடுக