திங்கள், 22 நவம்பர், 2010
இந்தியாவில் தினந்தோறும் 8 குழந்தைகள் தற்கொலை.
இந்தியாவில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட 14
வயதுக்குட்பட்டவர்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில்
கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
கடந்த 2009ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 2951 குழந்தைகள்
தற்கொலை செய்து கொண்டுள்ளன. இதில் 1450 பெண் குழந்தைகள் அடக்கம். குழந்தைகள்
தற்கொலையை பொறுத்தவரை மத்திய பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இந்த
மாநிலத்தைச் சேர்ந்த 266 சிறுவர்கள் மற்றும் 242 சிறுமிகள் தற்கொலை செய்து
கொண்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 453 தற்கொலைகளுடன் மேற்கு வங்கம் இரண்டாம்
இடத்திலும், 366 தற்கொலைகளுடன் கர்நாடகா 3ம் இடத்திலும் உள்ளது. தமிழகம் 4வது
இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 280 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் இரண்டு சிறுவர்கள் மட்டுமே தற்கொலை செய்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக