வெள்ளி, 26 நவம்பர், 2010
அதிக சூடாக டீ குடிப்பதைத் தவிருங்கள்.
சில பானங்களை சூடாகக் குடித்தால்தான் குடித்த மாதிரி இருக்கும். ஆனால் பலரும் அதிக சூடாக தேநீர் குடிப்பார்கள். அப்படிக் குடிப்பது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறது சில ஆய்வுகள். மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக் குழாய் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக் குழாய் மிகவும் மிருதுவானது. குறிப்பிட்ட அளவில்தான் சூட்டை அது தாங்கக் கூடியதாக உள்ளது. சூடு அதிகமானால் அதன் சுவர் அரிக்கத் துவங்கிவிடும். அதிகமான சூட்டுடன் டீ குடிக்கும் போது உணவுக் குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு திசுக்கள் பலவீனம் அடைகிறது.
0 comments:
கருத்துரையிடுக