வெள்ளி, 26 நவம்பர், 2010

மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு.


செல்போன், செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் நமது மூளை, இதயம், வயிற்றில் இருக்கும் சிசு உள்பட பலவற்றையும் பாதிக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது. வைஃபி வயர்லெஸ் தொழில்நுட்பமும் பாதிப்புகளை ஏற்படுத்துவது தற்போது தெரியவந்துள்ளது.
ஹாலந்தின் ஆல்பனான் டென்ரின் என்ற நகரில் நன்கு செழித்து வளர்ந்திருந்த மரங்கள் திடீர்திடீரென கருகத் தொடங்கின. இலைகள் பழுப்பு நிறமாக மாறின. மரத்தின் பட்டைகள் பாதிக்கப்பட்டன. வித்தியாசமான நோய் தாக்கியது போல மரங்கள் மாறின. இதுதொடர்பாக வேகனிங்கன் பல்கலைக்கழகம் தீவிர ஆய்வு நடத்தியது.

நகர பகுதிகளில் முக்கால்வாசி மரங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. 5 ஆண்டுகளுக்கு முன்பு 10 சதவீத மரங்களில் மட்டுமே இந்த பாதிப்பு இருந்தது. காட்டில் இருந்த மரங்கள் பாதிக்கப்படவில்லை. வயர்லெஸ் கருவிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுதான் காரணம் என்று முதல்கட்ட சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, 20 மரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 6 வகையான கதிர்வீச்சுகள் அவற்றின் மீது செலுத்தப்பட்டன. இதில், வைஃபி ரூட்டர் கருவிகளின் அருகே இருந்த மரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. மரம் மற்றும் இலையின் மேல் பகுதிகள் ரூட்டர் கருவியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து இத்தாக்குதலுக்கு உள்ளான மரங்கள் அழியும் நிலையை எட்டியதும் தெரியவந்தது.
ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், வீடியோகேம் கருவி, எம்பி3 பிளேயர், பிரின்டர், லேப்டாப் ஆகியவற்றில் வயர்லெஸ் தொடர்புக்காக ‘வைஃபி’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் ரூட்டர் கருவியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தாவரங்களைப் போல மனிதர்களிடமும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்று தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. 

0 comments:

கருத்துரையிடுக