வியாழன், 25 நவம்பர், 2010
தென்கொரியா - வடகொரியா இடையே போர் மேகம் பதற்றத்தை குறைக்க ஐ.நா. தீவிர முயற்சி.
கொரிய தீபகற்ப பகுதிக்கு அமெரிக்க போர்க் கப்பல் யு.எஸ்.எஸ். ஜார்ஜ் வாஷிங்டன் விரைந்துள்ள நிலையில், தென்கொரியா &ஹஙுசி; வடகொரியா இடையே போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் ஐ.நா. தீவிரமாக இறங்கியுள்ளது. கடல் எல்லை பிரச்னை தொடர்பாக தென்கொரியா - வடகொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. ரோந்து பணியில் ஈடுபட்ட தென்கொரிய போர்க் கப்பல், வடகொரியா எல்லை அருகே சில மாதங்களுக்கு முன் மர்மமாக மூழ்கியது. வடகொரியா நடத்திய ஏவுகணை தாக்குதல்தான் இதற்கு காரணம் என தென்கொரியா குற்றம் சாட்டியது. இதை வடகொரியா மறுத்து வந்தது. வடகொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தென்கொரியா &ஹஙுசி; அமெரிக்கா இணைந்து கொரிய கடல் பகுதியில் பிரமாண்ட போர்பயிற்சியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈடுபட்டன.
இந்நிலையில் பிரச்னைக்குரிய இயோன்பியாங் தீவில் தென்கொரிய ராணுவத்தினர் நேற்று முன்தினம் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது வடகொரியாவிலிருந்து சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் ராணுவ முகாம்கள் மற்றும் வீடுகள் பலத்த சேதமடைந்தன. கடந்த 1953ம் ஆண்டு முடிந்த கொரிய போருக்குப்பின், நடைபெறும் மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலையடுத்து இயோன்பியாங் தீவுக்கு, தென்கொரிய போர்க் கப்பல்களும், ராணுவத்தினரும் விரைந்துள்ளனர். தாக்குதல் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வடகொரியாவின் தாக்குதலுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தென்கொரிய அதிபர் லீ மியூங் பக்கிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, பிதென்கொரியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்பீ என உறுதி அளித்தார். அமெரிக்காவின் பிரமாண்ட போர்க் கப்பல் யு.எஸ்.எஸ். ஜார்ஜ் வாஷிங்டன், கொரிய தீபகற்ப பகுதிக்கு செல்ல அமெரிக்கா நேற்று உத்தரவிட்டது. டோக்கியோ அருகேயுள்ள கடற்படை தளத்தில் முகாமிட்டிருந்த யு.எஸ்.எஸ். வாஷிங்டன் கப்பல், நேற்று காலை கொரிய தீபகற்ப பகுதியை நோக்கி புறப்பட்டது. இந்த கப்பலில் 75 போர் விமானங்கள் உள்ளன. 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். பிதென்கொரியா நடத்தும் போர் பயிற்சியில், அமெரிக்க கப்பல் இணைந்து கொள்ளும். இது பாதுகாப்பு நடவடிக்கைதான்பீ என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், வடகொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், விமானம் தாங்கி போர்க்கப்பலை கொரிய கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் ஐ.நா. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிரச்னையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா முன்வர வேண்டும் என ஐ.நா. அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக