புதன், 24 நவம்பர், 2010
உத்தரப்பிரதேசத்தில் திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் திருமணம் ஆகாத பெண்கள் யாருமே செல்போன்
பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். முசாபர்நகர் மாவட்டத்தில் லாங்க்
கிராமத்தில்தான் இந்த தடை. ஊர் பஞ்சாயத்தார் நேற்று கூடி விவாதித்து போட்ட உத்தரவு.
பள்ளி, கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும்
அவர்களுக்கும்தான் இந்த கட்டுப்பாடு.
இது பற்றி, அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்தர் மாலிக்
கூறியதாவது:
திருமணம் ஆகாத பெண்களுக்கு செல்போனில் வாலிபர்களிடம்
இருந்து தொந்தரவு ஏற்படுகிறது. பெண்ணே மனம் விரும்பி பேசுவதும் தவறுதான். ஏனெனில்,
பெற்றோர் விரும்பாத காதலை நாங்கள் ஏற்கவில்லை. அதை அனுமதித்தால், கிராமத்தில்
பிரச்னைகள் ஏற்படும். அதனால்தான் ஊரே கூடி, இப்படியொரு முடிவை எடுத்துள்ளோம்.
இதற்கு எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்வாறு ராஜேந்தர் மாலிக் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக