வெள்ளி, 26 நவம்பர், 2010
ஐபோன், ஐபாட் மூலம் தமிழ் கற்க புதிய சாப்ட்வேர்!
ஐபோன்கள் மற்றும் ஐபாட் ஆகியவற்றின் மூலம் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் கற்றுக்
கொடுக்கும் புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஐம்கரா என்ற நிறுவனம்
உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் இன்று இந்தியர்கள் பரவி விட்டனர்.
குறிப்பாக தமிழர்கள் இல்லாத பகுதியே இல்லை என்று கூட கூறலாம். தமிழர்களும்,
இந்தியர்களும் உலகம் முழுவதும் விரவியிருப்பதால் தமிழும், இந்திய மொழிகளும் இன்று
உலகமயமாகியுள்ளன. இருப்பினும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், பிற
இந்தியர்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை கற்றுத் தர
முடியாத நிலையில் உள்ளனர் அல்லது நேரம் இல்லாமல் உள்ளனர். அந்தக் கவலை இப்போது
அகலப் போகிறது. இந்தக் குறையைத் தீர்க்க வந்துள்ளது ஐம்கரா என்ற
நிறுவனம்.
ஐம்கரா நிறுவனம் இதற்காகவே ஒரு விசேஷ அப்ளிகேஷன் சாப்ட்வேரை
உருவாக்கியுள்ளது. இது ஐபாட் மற்றும் ஐபோன்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை
கற்றுத் தருகிறது. நமக்கு நமது தாய்மொழியை கற்றுக் கொடுக்கிறது இந்த
அப்ளிகேஷன். தமிழை எழுதவும், படிக்கவும் இந்த ஐம்கரா அப்ளிகேஷன்
உதவுகிறதாம். எழுத்துக்களை சொல்லிக் கொடுக்க அடையாளங்களை (Symbols) இது
பயன்படுத்துகிறது.
ஆடியோ-விஷூவல் வடிவில் உள்ள இது, தமிழ் மீதான அறிவை
மேம்படுத்த விரும்புவோருக்கும் பேருதவியாக வந்துள்ளது. ஆப்பிள் ஸ்டோர்களில் இதை
டவுன்லோட் செய்து கொள்ள முடியும். தற்போது வந்துள்ள 1.0 வெர்சன், மொழிகளின்
அடிப்படைகள் குறித்ததாக அமைந்துள்ளது. இருப்பினும் விரைவில் இதை மேலும் மேம்படுத்தி
வெளியிடவுள்ளனராம். வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் இந்தியர்கள் தங்களது தாய்
மொழியை தங்களது பிள்ளைகளுக்கு தெளிவாக, சரியாக சொல்லித் தர இந்த அப்ளிகேஷன் உதவும்
என்கிறது ஐம்கரா.
0 comments:
கருத்துரையிடுக