ஞாயிறு, 28 நவம்பர், 2010
புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையினால் மரணிப்பவர்கள் ஆறு லட்சம் பேர்.
புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம்பேர்
மரணிக்கின்றார்கள் என உலக சுகாதாரமையம் புள்ளிவிபரம்
வெளியிட்டுள்ளது. இவ்வாய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில்
பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகளாவர். குழந்தைகளுக்கு நிமோனியா, ஆஸ்துமா
போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது. 165000 குழந்தைகள் புகைபிடிப்பவர்கள்
விடும் புகையை சுவாசிப்பதனால் மரணிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்கு
ஆசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சார்ந்தவர்கள்.
சொந்த வீடுகளில் வைத்துதான்
குழந்தைகளை இதர நபர்கள் விடும் புகை பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகை
பிடிப்பவர்களில்லாத வீடுகளில் வசிக்கும் குழந்தைகளை விட புகைபிடிப்போர் வசிக்கும்
வீடுகளில் வாழும் குழந்தைகளின் நுரையீரல்கள் மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன என்பது
ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் உலகமுழுவதும் 40 சதவீத
குழந்தைகளும், 33 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் மறைமுக புகையினால்
பலியாகியுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக