வியாழன், 18 நவம்பர், 2010

ஆண் குழந்தை வயிற்றுக்குள் கரு.


பிறந்த குழந்தையின் வயிற்றுக்குள் மற்றொரு கரு இருந்த விசித்திர சம்பவம் .சட்டீஸ்கர் மாநிலத்தின் தாம்தரி மாவட்டத்தின் அபான்பூர் பகுதியை சேர்ந்தவர் திகம்சந்த். அவரது மனைவி பிலேஸ்வரி. இவர்களுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதன் வயிற்றுப் பகுதியில் வீக்கமாக இருந்ததுடன், குழந்தை தொடர்ந்து அழுதபடி இருந்தது. ராய்ப்பூர் நகரில் உள்ளது பால் கோபால் குழந்தைகள் மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர் எடுத்து வந்தனர். குழந்தையை சோதித்த டாக்டர்கள் அதிர்ந்தனர். ஒரு மாத குழந்தையின் வயிற்றுக்குள் வளராமல் நின்று போன கரு இருந்தது. இதையடுத்து, குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து கருவை டாக்டர்கள் அகற்றினர். இதுபற்றி டாக்டர் அசோக் பாட்டர் கூறியதாவது:
குழந்தையின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தோம். பிறந்த குழந்தையின் வயிற்றில், வளர்ச்சி நின்று போன நிலையில் கரு இருந்தது. உடனடியாக, மற்ற டாக்டர்கள் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து அது அகற்றப்பட்டது. வெளியே எடுக்கப்பட்ட கருவில் கண்கள், நகங்கள் இருந்தது ஆச்சரியம். இதுபோல அரிதாக நடப்பதுண்டு. ஒரே நேரத்தில் இரண்டு கரு உருவாகும்போது ஒன்றின் வளர்ச்சி தடைபட்டு மற்றதில் ஒட்டிக் கொள்ளும் என்றார்.
குழந்தையின் தாய் பிலேஸ்வரி கூறுகையில், “பிறந்தது முதலே குழந்தையின் வயிற்றில் கூடுதல் சதை இருப்பதுபோல தெரிந்தது. அழுதபடி இருந்தது. ஏழையான எங்களால் சிகிச்சை செலவு கருதி மருத்துவமனை செல்லாமல் காலம் கடத்தினோம். ஆனால், ராய்ப்பூர் மருத்துவனை டாக்டர்கள் எங்கள் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்தனர்” என்றார். 

0 comments:

கருத்துரையிடுக