ஞாயிறு, 5 டிசம்பர், 2010

கோபத்தைக் குறைக்க 1 ஸ்பூன் சர்க்கரை போதும்

அடுத்த தடவை நீங்கள் கோப்பபடும்போது சட்டென்று இனிப்பான ஒரு கிளாஸ் எலுமிச்சம் பழச்சாறு அல்லது ஒரு சாக்கலேட்டை சாப்பிடுங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் கோபம் சிறிது நேரத்திற்கு தணியும். கோபம் வரும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டால் சிறிது நேரம் கோபம் தணியும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் ஒரு சிலருக்கு இனிப்பான எலுமிச்சம் பழச்சாறும், ஒரு சிலருக்கு இனிப்பில்லாததும் கொடுக்கப்பட்டது. இதில் இனிப்பான பழச்சாறு குடித்தவர்கள் புதிதாக பார்ப்பவர்களிடம் சிறிது நேரத்திற்கு பிறகே கோபப்பட்டுள்ளனர். ஆனால் இனிப்பில்லாத பழச்சாற்றை குடித்தவர்கள் எடுத்த எடுப்பிலேயே சீறியுள்ளனர்.
மூளைக்கு சக்தி அளிக்கும் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் தான் இதற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது குறித்து ஒஹாயோ மாநில பல்கலைக்கழகத்தின் தொடர்பு மற்றும் மனோதத்துவ பேராசிரியர் பிராட் புஷ்மேன் கூறியதாவது, கோபத்தைக் கட்டுப்படுத்த சுய கட்டுப்பாடு தேவை. சுய கட்டுப்பாட்டிற்கு அதிக சக்தி தேவை. குளுக்கோஸ் அந்த சக்தியை மூளைக்கு அளிக்கிறது. இனிப்பான எலுமிச்சம் பழச்சாற்றை குடிப்பது சிறிது நேரத்திற்கு சக்தி அளித்து பிறரிடம் கோபப்படாமல் இருக்க உதவுகிறது என்று அவர் கூறினார். இந்த ஆய்வு ஆன்லைனில் அக்ரஸிவ் பிஹேவியர் என்னும் தலைப்பில் இருக்கிறது. இது விரைவில் புத்தகமாக வெளியிடப்படும்.

0 comments:

கருத்துரையிடுக