ஞாயிறு, 5 டிசம்பர், 2010
குழந்தைகள் கொடுமையில் மிசோரம் 2-வது இடம்: முதலிடத்தில் அசாம்
நாட்டிலேயே குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் மிசோரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அன்டை மாநிலமான அஸ்ஸாம் முதலிடத்தில் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி மிஸோரம் மாநிலத்தில் சேலத்தைச் சேர்ந்த 35 வயதான ஒருவர் தக்திங் பகுதியில் 5 வயது சிறுமியை கற்பழித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூரச் செயலால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைத்தனர். அவர்கள் ஆத்திரம் குறையும் முன் ஐஸ்வால் அருகே உள்ள முவாலங்க்து கிராமத்தில் இன்னொரு 5 வயது சிறுமி கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டாள். இந்த குற்றம் நடந்த மறுநாள் 26 வயதான மியன்மாரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
0 comments:
கருத்துரையிடுக