சனி, 4 டிசம்பர், 2010

பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 ஆரம்பம்.

பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் பொதுத் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது. மார்ச் 2ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பமாகிறது. மார்ச் 28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன.  2011ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ்2, பத்தாம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளுக்கான அதிகாரப் பூர்வ தேர்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.  இதன்படி பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிகின்றன. பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி முடிகின்றன. மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் மார்ச் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி முடிகின்றன. பிளஸ் 2 வில் எட்டு லட்சம் பேர் உட்பட இந்த தேர்வுகளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக