ஞாயிறு, 5 டிசம்பர், 2010
திற்பரப்பில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்.
பேச்சிப்பாறை அணையில் உபரிநீர் வெளியேற்றுவதை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் அதிகளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள குளங்கள், அணைகள் நிரம்பி வருகின்றன. தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று முன்தினம் ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர் உள்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று 1500 கனஅடியாக வெளியேற்றப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் அதிகளவு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.அருவியின் மேல் பகுதி செக்டேமில் உல்லாச படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்
0 comments:
கருத்துரையிடுக