திங்கள், 27 டிசம்பர், 2010
ஜனவரி 27ல் சென்னை, மதுரையில் பேரணி 100 வாகனங்களில் செல்ல குமரி தவ்ஹீத் ஜமாத் முடிவு.
பாபர் மசூதி விவகாரத் தில் அநீதியான தீர்ப்பை கண்டித்து சென்னை மற்றும் மதுரையில் உயர்நீதிமன்றங்களுக்கு முன் பாக ஜனவரி 27&ந் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பது தொடர் பாக குமரி மாவட்ட கிளையின் ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜலீல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொரு ளாளர் சாதிக் மற்றும் மாநில செயலாளர் ஹாஜாநூஹ் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் ஜனவரி 27ல் நடைபெறும் சென்னை, மதுரை பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு குமரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது, மாவட்டம் முழுவதும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது, பாபர் மசூதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மூலம் நியாயமான தீர்ப்பு பெற ஜனநாயக முறையில் போராடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 comments:
கருத்துரையிடுக