வெள்ளி, 3 டிசம்பர், 2010

மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் குறை பிரசவ வாய்ப்பு அதிகம்!


அதிக போக்குவரத்து நெருக்கடி மற்றும் முக்கிய சாலைகள் அருகே வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு காற்று மாசுபாடு காரணமாக குறை பிரசவ குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
ஜப்பான் நாட்டின் ஒகயாமா மருத்துவப் பள்ளியின் தகசி யோரிபுஜி தலைமையில் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வுக்கு டோக்கியோவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள ஷிஜூவாகா என்ற இடத்தில் 1997ல் இருந்து 2008 வரை பிறந்த 14,000 குழந்தைகள் எடுத்து கொள்ளப்பட்டன. ஆய்வு முடிவு குறித்து தகசி கூறுகையில், ‘குறை பிரசவத்திற்கு காற்று மாசுபாடு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதிக போக்குவரத்து நெருக்கடி மற்றும் முக்கிய ரோடுகள் அருகே வசிக்கும் கர்ப்பிணி பெண்களை காற்று மாசுபாடு அதிகளவில் தாக்குகிறது. வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளை காட்டிலும், வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது’ என்கிறார்.ஆய்வில் தெரிய வந்திருப்பதாவது: 
முக்கிய ரோடுகளில் இருந்து 200 கி.மீ. தொலைவில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு 37 வாரங்களுக்கு முன்பு குறை பிரசவ குழந்தை பிறக்கிறது. இத்துடன், வயது, வேலை, புகை பிடித்தலும் காரணங்களாக அமைகின்றன. அதிக போக்குவரத்து நெருக்கடி இடங்களில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவத்திற்கான வாய்ப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 32 அல்லது 28 வாரங்களுக்குள் குழந்தை பிறக்கும் அதிக பாதிப்பில் உள்ளனர். 
எப்பொழுதும் பிசியாக இருக்கும் சாலைக்கு அருகில் வசிக்கும் பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாக உள்ளது. இது கர்ப்பத்தில் சிசுவை சுற்றியுள்ள மெல்லிய திசுக்களை உடைத்து, குறை பிரசவ குழந்தை பிறக்க காரணமாகிறது. இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக