வெள்ளி, 3 டிசம்பர், 2010
விக்கிலீக்ஸுக்கு தடை: பாகிஸ்தான் நீதிமன்றம் நிராகரிப்பு.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனுப்பிய ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸுக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை பாகிஸ்தான் நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கறிஞர் ஆரிஃப் கோண்டல் என்பவர் லாகூர் உயர்நீதிமன்றத்தில் அந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் முஸ்லீம் நாடுகளிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், பாகிஸ்தானில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஜ்மத் சயீது, 21 ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற விவகாரங்களில் மக்கள் உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும், 170 நாடுகள் குறித்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் மக்கள் உண்மைகளை தெரிந்துகொள்வதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்றும் கூறி நீதிபதி அம்மனுவை தள்ளுபடி செய்தார்.
0 comments:
கருத்துரையிடுக