செவ்வாய், 7 டிசம்பர், 2010

போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் வழக்கை எஸ்ஐடி விசாரிக்கும்-சுப்ரீம் கோர்ட்.

குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளம் பெண் இஷ்ரத் ஜஹான் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணையை எதிர்த்து குஜராத் அரசு தாக்கல் செய்திருந்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. டெல்லி போலீஸ் இணை ஆணையர் கர்னைல் சிங் தலைமையிலான எஸ்ஐடி குழு இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கை விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜஹான் வழக்கை விசாரிக்க முதலில் குஜராத் உயர்நீதிமன்றம்தான் எஸ்ஐடியை அமைத்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்துதான் குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தற்போது அந்த மனு தள்ளுபடியாகியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக