திங்கள், 6 டிசம்பர், 2010
பாபர் மசூதி இடிப்பு தினம் நாகர்கோவிலில் இன்று தமுமுக ஆர்ப்பாட்டம்.
பாபர் மசூதியில் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கவேண்டும். ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்து வரும் பாபர்மசூதி இடிப்பு வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும். லிபரான் கமிஷன் விசாரித்து குற்றம் சாட்டியவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பேச்சாளர் ஜெய்னூல் ஆப்தின் தலைமைவகித்தார். தமுமுக மாவட்ட தலைவர் பீர்முகமது முன்னிலை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் செய்யது அலி, தமுமுக மாவட்ட செயலாளர் முகமது ஷபீக், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். தமுமுக மாவட்ட பொருளாளர் யூசுப் நன்றி கூறினார். மாவட்ட துணைத்தலைவர் பாரூக், துணைச்செயலாளர் சமீம், பயாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் ரிபாய், முன்னாள் நிர்வாகிகள் பெரோஸ்கான், மீராஷா, நசீர், செய்யது அலி, முகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 comments:
கருத்துரையிடுக