புதன், 29 டிசம்பர், 2010

நாகர்கோவில் அருகே குளத்தில் மிதந்த இளம்பெண் உடல்.

நாகர்கோவில், டிச.29: நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தில் இருந்து இலந்தையடி செல்லும் சாலையில் பார்வதிபுரம் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த பாதையில் தற்போது சீரமைப்பு பணிகளுக்காக தண்டவாள கம்பிகள் குவிக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் பாசி படர்ந்த நிலையில் குளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து இன்று காலை துர்நாற்றம் அதிகமாக வீசியது. இதற்கிடையே அந்த வழியாக சென்ற சிலர் குளத்தில் புதர்கள் மண்டி கிடந்த இடத்தில் பெண் ஒருவரின் உடல் மிதந்ததை இன்று காலை பார்த்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வடசேரி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். 
உடல் அழுகிய நிலையில் இருந்தது. 2, 3 நாட்களுக்கு முன்பே உடலை இங்கு கொண்டு வந்து வீசி இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்து கிடந்த பெண் சேலை, ஜாக்கெட் அணிந்திருந்தார். அவரது கழுத்தில் ஒரு செயின் கிடந்தது. அதில் சிலுவை டாலர் ஒன்றும் இருந்தது. கையில் வாட்ச் கட்டப்பட்டிருந்தது. 25 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் எனத்தெரிகிறது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக எதுவும் தெரிய வில்லை. உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்,? அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக