சனி, 18 டிசம்பர், 2010

டாக்டர் ஹனீஃப் ஆஸ்திரேலியா சென்றார்.

எவ்வித காரணமுமின்றி தன்னை சிறையிலடைத்த ஆஸ்திரேலிய அரசிடமிருந்து இழப்பீடு பெறுவதற்காக இந்திய டாக்டர் ஹனீஃப் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறிய டாக்டர் ஹனீஃப் ஆஸ்திரேலிய அரசிடமிருந்து மத்தியஸ்த நடவடிக்கைகள் மூலம் இழப்பீடு பெறுவதற்கு முயல்வேன் என தெரிவித்தார். ஆஸ்திரேலிய அரசு தவறாக கைதுச் செய்து சிறையிலடைத்தது தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில் தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பத்திரிகையாளர்களிடம் ஹனீஃப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் கோல்டக்ராஸ் மருத்துவமனையில் பணியாற்றிய இந்திய டாக்டர் ஹனீஃப் தீவிரவாதக் குற்றஞ்சாட்டப்பட்டு 12 தினங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீசார் ஹனீஃப் மீது சுமத்திய குற்றங்களை 2008 ஆம் ஆண்டு இதுக்குறித்து விசாரித்த கமிஷன் தள்ளுபடிச் செய்து ஹனீஃப் நிரபராதி என்பதை கண்டறிந்தது. தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் ஹனீஃப் ஆஸ்திரேலியாவில் 10 தினங்கள் தங்கியிருப்பார். ஹனீஃபிற்கு ஆஸ்திரேலிய அரசு கடுமையான அநீதியை இழைத்துள்ளது என அவரது வழக்கறிஞர் ரோட் ஹோட்க்ஸன் தெரிவித்தார்.
நீதிபதியும், முன்னாள் க்வின்சிலாந்து ஊழல் தடுப்பு கமிஷனருமான டோனி ஃபிட்ஸ்ஜெரால்ஸின் முன்னிலையில் வைத்து அடுத்த வாரம் மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடைபெறும் என ஹோட்க்ஸன் தெரிவித்தார்.

செய்தி:மாத்யமம் & பாலைவனத் தூது

0 comments:

கருத்துரையிடுக