ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் பல நாடுகள் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க பல நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன” என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசியதாவது:  உலகளவில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா வளர்ந்து வருகிறது. அதனால், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நமது நாட்டுக்கு நிரந்தர இடம் அளிக்க பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்தியாவின் பலமும், மனித வளமும்தான் இதற்கு முக்கிய காரணம். ஒரு காலத்தில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு நாம்தான் சென்று வந்தோம். ஆனால், இப்போது, நிலை மாறி வருகிறது. அந்த நாடுகளின் தலைவர்கள் நமது நாட்டுக்கு வந்து, தங்கள் நாடுகளில் வேலை வாய்ப்பை உருவாக்க உதவும்படி கேட்கின்றன. கடந்த 5 மாதங்களில் இந்நாட்டு அதிபர்கள் இந்தியா வந்து பல்வேறு ஒப்பந்தங்கள் போட்டு சென்றுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக