கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே, இருவரும் பிரிந் தனர். இந்நிலையில், இப்ரா ஹிம்கரீம் வேலை தேடி குவைத் சென்றார். அங்குள்ள பிர்த்தவ்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் அரபுக்காரர் வீட் டில் வேலை பார்த்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வேலை பார்த்த ஆந்திராவை சேர்ந்த சூர்லாசுஜாதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்தனர். இதில் கர்ப்பமான சுஜாதா வுக்கு, பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இக்ரா என்று பெயரிட்டனர்.
இப்ராஹிமின் வீட்டில் குழந்தையை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ள னர். சிறுமியை வளர்க்கும் அரபி குடும்பத்தினர் குவைத் திலுள்ள இந்திய தூதரகத் துக்கு சென்று, ‘குழந்தையை தாயகத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர். கடந்த 2 வருடங்களாக இந்திய தூதரகத்துக்கு அவர்கள் அலைந்தும், குழந்தையை தமிழகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வில்லை.
இதேபோல், புதுக்கோட் டையை சேர்ந்த நாகவள்ளி என்ற பெண்ணின் கணவர் விஜயகுமாரை, குவைத் போலீசார் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தற்போது அவரது மனைவி, 2 குழந்தைகளுடன் தாயகம் திரும்ப முடியாமல் தவிக் கிறார். இதற்கிடையே அவரது விசா காலம் டிச.9ம் தேதியுடன் முடிந்துவிட்டது. தன்னையும், தனது குழந்தை களையும் தமிழ்நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக் குமாறு, இந்திய தூதரகத்துக்கு பலமுறை சென்றும் எந்த பலனுமில்லை.
எனவே, இவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுகவின் குவைத் அமைப்பாளர் பீர் மரைக்காயர், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மனு அனுப்பியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக