ஞாயிறு, 2 ஜனவரி, 2011

20 முதல் 35 வயதுக்குள் குழந்தைப் பேறு அடைவது நல்லது.

லண்டன்: குழந்தை பெறுவதற்கு சரியான வயது 20 முதல் 35 வரை தான் என்று இங்கிலாந்து மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிப் பருவத்திலேயே பெண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் டோனி பால்க்னர். குழந்தைப் பேறை பெண்கள் எப்போது அடைய வேண்டும் என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார். இதுகுறித்து டோனி கூறுகையில், தற்போது பெண்கள் தங்கள் பணியில் கவனம் செலுத்துவதை முதன்மையாகக் கொண்டு குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகின்றனர். இதனால் அவர்களுக்கு கருத்தரிப்பு திறன் குறையவும், கருத்தரிப்பதில் பிரச்சனையும் ஏற்படும். 30 முதல் 35 வயது வரை நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். எதிர்பார்ப்புகள் அதிகமுள்ள தற்போதைய சமூகத்தில் காத்திருந்து வயதான பிறகு பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. இது ஒரு முக்கியமான பிரச்சனையாகும்.
குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவதால் பிரச்சனை தான் ஏற்படும். 40 வயதில் கருத்தரித்தால் கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறக்கும் வாய்ப்பு 30 சதவிகிதம் உள்ளது. மேலும், 45 வயதில் கருத்தரிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு 40 சதவிகிதம் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வயதான காலத்தில் கருத்தரிப்பதன் விபரீதங்களை எடுத்துக கூறினால் அவர்கள் வயது வரும்போது அதை உணர்வார்கள்.
குழந்தைகளுக்கு கருத்தரிப்பு மற்றும் இளம்வயதில் கர்ப்பமாவது பற்றி கூறும்போது, கருத்தரிக்க சரியான வயது எது என்பதையும் தெரிவிக்க வேண்டும். பெண்கள் குழந்தை பெற சரியான வயது 20 முதல் 35 வரை தான் என்று அவர் கூறினார்.
சில பிரபலங்கள் திருமணமாகி வெகு காலமாகியும் கூட வயது ஓடிய பின்னர் குழந்தை பெற்றுக் கொள்வதை பேஷனாக வைத்துள்ளனர். இதைப் பார்த்து விட்டு, வாழ்க்கையை சில காலம் ஜாலியாக அனுபவிட்டு பின்னர் குழந்தைகள் குறித்து யோசிக்கலாம் என்று நினைப்போர் உண்டு. ஆனால் மருத்துவ ரீதியாகவும், உடல் ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் இது எதிர்மறை விளைவுகளையே தரும் என்பதே உண்மை. ஆக வேண்டிய நேரத்தில் அதது ஆக வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருப்பதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

0 comments:

கருத்துரையிடுக