ஞாயிறு, 2 ஜனவரி, 2011

பெண்களுக்கு எதிரான கொடு்மை கேரளாவில் அதிகரிப்பு: தேசிய மகளிர் ஆணையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையத் தலைவி கிரிஜா வியாஸ் தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையத் தலைவி கிரிஜா வியாஸ் கடந்த 29-ம் தேதி கேரளா வந்தார். மகளிர் மேம்பாடு குறித்து கொச்சியில் பல்வேறு மகளிர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதே கேரளாவில்தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வயதுக்கு வராத சிறுமிகள் கூட பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் கேரளாவில் அதிகரித்துள்ளது. இந்த குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும். மலப்புரம், காசரக்கோடு ஆகிய மாவட்டங்களில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 
இதை தடுக்க தேசிய மகளிர் ஆணையம் இந்த மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்தில் மற்ற மாநிலங்களை விட கேரளா மு்ன்னிலையில் இருந்தாலும் பெண்கள் கொடுமை வழக்கு இங்கு அதிகரித்து வருகிறது. குறி்ப்பாக வரதட்சனை தொடர்பான வழக்குகள் இங்கு அதிக அளவில் நடந்து வருகிறது என்றார்.

0 comments:

கருத்துரையிடுக