வெள்ளி, 14 ஜனவரி, 2011
குமரியில் 23ம் தேதி போலியோ தடுப்பு முகாம்.
குமரியில் வருகிற 23ம் தேதியும், பிப்ரவரி 27ம் தேதியும் போலியோ தடுப்பு முகாம் நடக்கிறது.
இந்த வருடம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 50 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது. கடந்த வருடம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. இந்த முகாம் வருகிற 23ம் தேதியும், பிப்ரவரி 27ம் தேதியும் நடக்கிறது. போலியோ மருந்து போடுவதற்காக 1208 மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் கிராம பகுதியில் 1106ம், நகர பகுதியில் 102ம் அமைக்கப்படுகிறது. இந்த மையங்களில் 3310 ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். அந்த ஊழியர்கள் முகாம் நடந்த மறுநாள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்வார்கள். அப்போது போலியோ மருந்து வழங்காத குழந்தைகள் இருக்கும் வீட்டில் ‘எக்ஸ்‘ குறி போடப்படும். அவர்களுக்கு வழங்கியபிறகு அந்த குறி அழிக்கப்படும்.
0 comments:
கருத்துரையிடுக