ஞாயிறு, 2 ஜனவரி, 2011

தெற்கு ரயில்வேயில் 3592 காலியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு விண்ணப்பிக்க வரும் மார்ச் 7ம் தேதி கடைசி நாள்.

நாகர்கோவில், ஜன.2: தெற்கு ரயில்வேயில் 3592 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 7ம் தேதி கடைசி நாள் ஆகும். தெற்கு ரயில்வே ரெக்ரூட்மென்ட் பிரிவு சார்பில் தெற்கு ரயில்வே மற்றும் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் ஸ்வீப்பர், ஹெல்பர், டிராக்மேன் உள்ளிட்ட 9 விதமான பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. ஸ்வீப்பர் கம் போர்ட்டர் 241, டிராக்மேன் சிவில் 1947 உட்பட தெற்கு ரயில்வேயில் மட்டும் 3087 பணியிடங்களும், இதர இணைப்பு பெட்டி தொழிற்சாலை உற்பத்தி பிரிவில் 505 உட்பட 3592 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. 
உடல் திறன்தேர்வு, எழுத்து தேர்வு என்று இரு நிலைகளில் ஆள்சேர்ப்பு நடத்தப்படுகிறது. மொத்த இடத்தில் 389 இடங்கள் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு பொதுபிரிவுக்கு 18 முதல் 33 வரையும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 18 முதல் 36 வரையும், எஸ்சிஎஸ்டி பிரிவுக்கு 18 முதல் 38 வரையும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
மேலும் குறிப்பிட்ட முன்னுரிமை பிரிவுகளுக்கு வயது வரம்பில் சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகப்படியான கல்வி தகுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். முதலில் உடல் திறன் தேர்வும், தொடர்ந்து எழுத்து தேர்வும், மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும். விண்ணப்ப படிவங்கள் ரயில்வே இணையதளத்தில் இருந்தும் பதவிறக்கம் செய்துகொள்ளலாம். 

0 comments:

கருத்துரையிடுக