வியாழன், 27 ஜனவரி, 2011

ஈராக்: கார் குண்டு தாக்குதலில் 40 பேர் பலி.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடந்த கார் குண்டு தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.  பாக்தாத்தில் உள்ள மயானம் ஒன்றின் அருகே இன்று மதியம் 2 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.  இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்தவர்கள்,தங்களது கார்களை அங்கு நிறுத்தி வைத்திருந்தனர்.  அப்போது அந்த காரோடு காராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வைக்கப்பட்ட காரை, மர்ம ஆசாமிகள் வெடிக்க வைத்தனர். இந்த சம்பவத்தில் 40 பேர் பலியானதாகவும், 78 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக