வியாழன், 27 ஜனவரி, 2011

650 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது பிபிசி!

லண்டன் பிபிசி நிறுவனம் தனது 650 ஊழியர்களை திடீரென்று நீக்கியுள்ளது. நிறுவனத்தைக் காக்க வேறு வழியில்லாததால் இந்த முடிவு என்றும் அறிவித்துள்ளது. ஆப்ரிக்க பகுதிகளுக்கான அல்பேனியன், மாசிடோனியன், போர்ச்சுகீஸ் மொவி சேவை, செர்பிய மொழி சேவை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான ஆங்கில சேவை போன்றவற்றை மூடிவிட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 46 மில்லியன் பவுண்டுகள் சேமிக்க முடியும் என்பதால் இங்கு பணியாற்றிய 650 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.
தனிப்பட்ட திறமை அடிப்படையில் இந்த பணிநீக்கங்கள் இடம்பெறவில்லை என்றும், பிரிட்டிஷ் வெளிநாடு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் கொடுத்து வந்த நிதி நிறுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பிபிசி சர்வதேச இயக்குநர் பீட்டர் ஹாரோக்ஸ் தெரிவித்தார். இனி அதிக தேவையுள்ள மொழிகளின் சேவையில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு தினங்களுக்கு முன்புதான் 360 ஆன்லைன் பணிகளை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது பிபிசி.
இதற்கிடையே, பிரிட்டனின் தேசிய பத்திரிகையாளர் யூனியன் இந்த வேலை நிறுத்தத்தை எதிர்த்து ஹவுஸ் ஆப் காமன்ஸ் தலைவருக்கு எழுதியுள்ளது. பி்பிசி உலக சேவை 1932-ம் ஆண்டு துவங்கப்பட்டது. உலகம் முழுவதும் 241 மில்லியன் நேயர்களைக் கொண்ட இந்த சேவைக்கு, ஆண்டுக்கு 272 மில்லியன் பவுண்டுகள் செலவாகிறது.

0 comments:

கருத்துரையிடுக