செவ்வாய், 25 ஜனவரி, 2011

இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் பெண் சிசு கொலை.

நாடு முழுவதும் ஆண்டு தோறும் 7 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் நடந்த கருத்தரங்கில் தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பினர் சத்தியபிரதா பால் பேசியதாவது: பெண் சிசு கொலையை தடுக்க அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்பதை அறிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ளும் பெற்றோர், அது பெண் குழந்தையாக இருந்தால் கருவிலேயே அழித்து விடும் கொடுமை இன்னும் நடக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது. 
பாலின பாகுபாடு காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வயது முடிவதற்கு முன்பே 17 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றன. குடும்பக் கட்டுப்பாடு திட்டம் இன்னும் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. அதற்கான மருத்துவ வசதிகள் மக்களுக்கு கிடைக்கவில்லை. 25% குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தும் கிடைப்பதில்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இன்னும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படாதது வெட்கக்கேடு. இவ்வாறு சத்தியபிரதா பால் பேசினார்.

0 comments:

கருத்துரையிடுக