வியாழன், 27 ஜனவரி, 2011

நாகர்கோவில் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டர், ஏட்டு மோதல்.

நாகர்கோவிலில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டரும், ஏட்டும் ஒருவரையொருவர் கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக இருந்தவர் தியாகராஜன். அவருக்கு அன்மையில் கருங்கல் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் கிடைத்தது. இடமாற்றத்திற்கான கடிதத்தை வாங்க அவர் நேற்று கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுள்ளார். இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன் குமரி மாவட்டத்தில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு அரசு சிறப்பு படி அளித்துள்ளது. இந்த சிறப்பு படி பெற தியாகராஜனும் அனுமதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடியிடம் தன் இடமாற்றக் கடித்தத்தை பெற்றுக் கொண்டார். தனக்கு கிடைக்க வேண்டிய சிறப்பு படியை அளிக்குமாறும் கேட்டுள்ளார். அதற்கு ஜான் அவரை திட்டயதாகத் தெரிகிறது.  பின்னர் வாக்குவாதம் அடிதடியில் முடிந்துள்ளது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி, கட்டிப் புரண்டுள்ளனர். சத்தம் கேட்டு அங்கிருந்த போலீசார் வந்து இருவரையும் விலக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த தியாகராஜன் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் குறித்து சூப்பிரண்டு பவானீஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். இரு போலீசார் கட்டிப்புரண்டடு சண்டை போட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக