புதன், 5 ஜனவரி, 2011

தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன வரதட்சனை கொடுமை வழக்குகள், பாலியல் பிரச்சனைக்கு இரண்டாமிடம்.

தமிழகத்தில் வரதட்சனை கொடுமை வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்று மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குண பாண்டியன் தெரிவித்தார். மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணபாண்டியன் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் பிரச்சனைகள் தொடர்பாக நிலுவையி்ல் உள்ள மனுக்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறி்யதாவது, 
கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் எங்கள் ஆணையத்திற்கு 6470 மனுக்கள் வந்துள்ளன. இதில் 4 ஆண்டுகளில் 3049 மனுக்களுக்கு ஆணையம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், 3421 மனுக்கள் நிலுவையில் உள்ளன.
மாநில அளவில் வரதட்சனை கொடுமை குறித்தே பெண்கள் அதிகளவில் மனுக்கள் அளிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக பாலியல் பிரச்சனை உள்ளது. சிசுக்களை கருவிலேயே ஸ்கேன் மூலம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் அழிக்கும் செயல்கள் 6 மாவட்டங்களில் அதிகம் உள்ளது. மதுரை, தேனி, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்த நடைமுறையை ஒழிக்க மகளிர் ஆணையம் போராடி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் இன்று நிலுவையில் உள்ள 20 வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது என்றார் அவர்.

0 comments:

கருத்துரையிடுக