வெள்ளி, 7 ஜனவரி, 2011
வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனி வாரியம்-தமிழக அரசு
வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனி வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்தினார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
-சத்துணவில் இனி பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படும்.
-வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனி வாரியம் அமைக்கப்படும்.
-கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
-காஞ்சிபுரம் மாவட்டம் ராஜீவ் காந்தி சாலைக்கும், கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் இடையில் உள்ள நெம்மேலியிலும், தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்திலும், தருமபுரி மாவட்டம் அரூரிலும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியிலும்; விருதுநகர் மாவட்டம் திருச்சுழியிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படும்.
-வேளாண்மைத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் நிறைந்த நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பெரிதும் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தோடு, நாகை மாவட்டத்தில் உள்ள கீவளூரில் இந்த ஆண்டு புதிதாக விவசாயக் கல்லூரி ஒன்று தொடங்கப்படும்.
- பனை, தென்னை விவசாயிகள் நலன் கருதி பனை நுங்குச் சாறும், தென்னை இளநீரும் பக்குவப்படுத்தி விற்பனை செய்யப்படும் என்றப கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக