புதன், 5 ஜனவரி, 2011

சூடான்:உமருல் பஷீரின் ஆட்சியை கவிழ்க்க ஹஸன் அல் துராபி அழைப்பு

கார்தூம்,ஜன.5:அதிபர் உமருல் பஷீரின் தலைமையிலான அரசை கவிழ்க்க சமாதான அடிப்படையில் வழிகளை தேடுவோம் என சூடானின் எதிர்கட்சித் தலைவர் ஹஸன் அல் துராபி கூறியுள்ளார். ஆட்சியாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பயனற்றது என புரிந்துக் கொண்டதால் அரசை கவிழ்க்க எதிர்கட்சிகள் ஒரே கருத்தை எட்டியதாக ஒரு காலத்தில் பஷீரின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்த ஹஸன் அல் துராபி தெரிவித்துள்ளார். தெற்கு சூடானில் விருப்ப வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானவுடன் இதற்கான முயற்சிகளுக்கு துணைக் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
துராபியின் தலைமையிலான பாப்புலர் நேசனல் காங்கிரஸ், ஸாதிக் அல் மஹ்தியின் தலைமையிலான உம்மா கட்சி, இதர சிறு கட்சிகள் ஆகியன விருப்ப வாக்கெடுப்பிற்கு பிறகு அரசு ராஜினாமாச் செய்யவேண்டும் என கோரியுள்ளன. அதற்கு அரசு தயாராகாவிட்டால் எதிர்கட்சி உறுப்பினர்கள் வீதியில் இறங்கி சமாதான ரீதியிலான எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் அரசை பதவி விலகச்செய்ய முடிவுச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் நடந்த சூடான் தேர்தலில் பஷீர் முறைகேடுகள் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய ஹஸன் அல் துராபி கைதுச் செய்யப்பட்டார்.

0 comments:

கருத்துரையிடுக