திங்கள், 17 ஜனவரி, 2011

காமசூத்ரா ஃபயல் எச்சரிக்கை - உங்கள் கணினிகளை ஹேக்கர்களுக்கு அடிமையாக்கும்.

வாஷிங்டன்,ஜன.17:காமசூத்ரா என்ற பெயரில் உங்கள் இ-மெயில் ஐ.டிக்கு வரும் ஃபயல்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் அதனை நீங்கள் ஓப்பன் செய்தால் உங்கள் கணினிகள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். கணினி பாதுகாப்புத் துறையில் செயல்படும் நிறுவனங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. ஒரு டஜனுக்கும் அதிகமான பாலியல் பொழுதுபோக்கு வழிகளை அறிமுகப்படுத்துவதாக கூறி இந்த பவர்பாயிண்ட் ஃபயல் உங்கள் மின்னஞ்சலுக்கு வருகை தரலாம்.
Real kamasutra.pps.exe என்ற பெயரில் வரும் ஃபயல்களைக் கண்டால் உண்மையான பவர்பாயிண்ட் ஃபயல்கள் எனத் தோன்றும். ஆனால், நீங்கள் அந்த ஃபயல்களை திறந்தால் வெகுதொலைவிலிருக்கும் ஹேக்கர்கள் உங்கள் கணினிகளை தங்களுடைய ப்ரோக்ராம்களின் படி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நிலை ஏற்படும். ஸோஃபோஸ் என்ற நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
வைரஸ் ப்ரோக்ராம்களை ரன் செய்யும் பொழுது உங்கள் கணினியில் உள்ள அனைத்து ஃபயல்களும் ஹேக்கர்களால் கையாள இயலும். கீ போர்டில் நீங்கள் டைப் செய்யும் அனைத்து விபரங்களும் ஹேக்கர்களுக்கு தெரியும் என்பதால் உங்களுடைய அனைத்து பாஸ்வேர்டுகளும், க்ரெடிட் கார்டு விபரங்களும் எளிதாக திருட இயலும்.

0 comments:

கருத்துரையிடுக