வெள்ளி, 21 ஜனவரி, 2011

விரைவில் புதிய பத்து ரூபாய் நோட்டு அறிமுகம்.

பத்து ரூபாய் நோட்டில் சில மாற்றங்களை செய்து புதிய பொலிவுடன் அதை விரைவில் வெளியிடவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், புதிய பத்து ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும். அதில், பத்து என்ற எண்ணுக்கு மத்தியில் என் என்ற ஆங்கில எழுத்து செருகப்பட்டிருக்கும். ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவின் கையெழுத்துடன் இந்த ரூபாய் நோட்டுக்கள் வெளியாகும்.
மகாத்மா காந்தி சீரிஸ் வரிசையில் வெளியாகும் இந்த ரூபாய் நோட்டில் வேறு பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. அதேசமயம், புதிய பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த புதிய நோட்டுக்கள் வந்தாலும் கூட பழைய பத்து ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். அவை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக