வெள்ளி, 21 ஜனவரி, 2011
வெளியூர் காசோலைகளுக்கு சேவைக் கட்டணம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
வெளியூர் காசோலைகளுக்கு வங்கிகளில் வசூலிக்கப்படும் சேவை வரியை பாதியாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. இதன்படி ரூ 5000-க்குட்பட்ட காசோலைகளுக்கு சேவைக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது முன்பு 50 ரூபாயாக இருந்தது. புதிய உத்தரவுப்படி இனி ரூ 25 மட்டும் வசூலிக்கப்படும். ரூ 5001 முதல் ரூ 10000 வரையிலான காசோலைகளுக்கு ரூ 50-ம், ரூ 10001 முதல் ரூ 1 லட்சம் வரையிலான காசோலைகளுக்கு ரூ 100-ம் வசூலிக்கப்படும். ரூ 1 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள காசோலைகளுக்கு வங்கிகள் விருப்பப்படி சேவைக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.
0 comments:
கருத்துரையிடுக