சனி, 15 ஜனவரி, 2011
ஹிந்துத்துவா பயங்கரவாதம் இந்தியாவில் வலுவான நிலையில் உள்ளது: திக் விஜய்சிங்
கொச்சி,ஜன.15:ஹிந்துத்துவா பயங்கரவாதம் இந்தியாவில் வலுவாக உள்ளது என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திக்விஜய் சிங் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் சில கட்சிகளும் ஹிந்துத்துவா பயங்கரவாதத்திற்கு உத்வேகமளித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ஹிந்துத்துவா பயங்கரவாதம் சக்திப்பெற்று வருகிறது. நான் அன்றே இதனை சுட்டிக்காட்டி வருகிறேன்.
0 comments:
கருத்துரையிடுக