புதன், 16 பிப்ரவரி, 2011
டீசல் விற்பதில் லிட்டருக்கு ரூ.10.74 நஷ்டம்
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கேற்றவாறு டீசல் விலை உயர்த்தப்படாததால், தற்போது லிட்டருக்கு ரூ.10.74 தங்களுக்கு நட்டம் ஏறபடுகிறது என்று மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தப்போவதில்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நேற்று கூறியிருந்த நிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் இந்த விவரத்தை தெரிவித்துள்ளார். டீசல் மட்டுமின்றி, மண்ணெண்ணை விற்பதில் லிட்டருக்கு ரூ.21.60 நட்டமாகிறது என்றும், 14.2 கி.கி. எடை கொண்ட சமையல் எரிவாயு உருளை ரூ.356.07 நட்டத்திற்கு விற்பதாகவும் கூறிய அந்த அதிகாரி, இதனால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் நாள் ஒன்றிற்கு ரூ.430 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும், இதில் டீசல் விற்பனையில் மட்டும் நாளுக்கு ரூ.247 கோடி இழப்பு ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக