புதன், 16 பிப்ரவரி, 2011

எகிப்தில் மீண்டும் போராட்டம்

எகிப்தில் அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹோஸ்னி முபாரக் நாட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், அங்கு தொடர்ந்து தொழிலாளர் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் கெய்ரோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள உயர்வு,சுகாதார நலன்கள் தொடர்பான சலுகைகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் நைல் படுகை நகரமான மஹல்லா அல்-கூப்ராவில் இயங்கும் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி தொழிற்சாலையின் தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேப்போன்ற மேலும் பல இடங்களிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய போராட்டங்களால் தொடர்ந்து அங்கு குழப்பமான சூழல் காணப்படுகிறது.

நன்றி: வெப்துனியா 

0 comments:

கருத்துரையிடுக