வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
திருவனந்தபுரத்தில் பள்ளி வேன் ஆற்றில் கவிழ்ந்து 5 குழந்தைகள்-ஆயா பலி
திருவனந்தபுரத்தில் இன்று காலை பள்ளி வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் 5 குழந்தைகள், ஆகியோர் பலியாயினர்.
திருவனந்தபுரம் சாக்கை கரிக்ககம் சாமுண்டி கோவில் பகுதியைச் சேர்ந்த 12 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் சென்றது.
ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு வாகனம், வேன் மீது மோதியது. இதில் வேன் நிலை தடுமாறி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் தண்ணீரில் மூழ்கி 5 குழந்தைகளும், குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆயாவும் பலியாயினர்.
மற்ற குழந்தைகள் மீட்கப்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: தட்ஸ்தமிழ்
0 comments:
கருத்துரையிடுக