வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
நைஜீரியாவில் மதக்கலவரம்; 12 பேர் படுகொலை
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் பழங்குடி மதத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் கிறிஸ்தவர்- முஸ்லிம்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜோஸ் நகரில் கிறிஸ்தவர்கள்- முஸ்லிம்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இது பெரும் கலவரமாக வெடித்தது. இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் 11 பேர் பலியானார்கள். கலவரத்தை அடக்க சென்ற போலீஸ்காரர் ஒருவரும் உயிர் இழந்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரத்தை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் நகரம் முழுவதும் ரோந்து சுற்றி வருகின்றனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக