கடந்த செவ்வாய்க்கிழமை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒருவர் பலியானார். அவரது இறுதி ஊர்வலம் மனாமா நகரில் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அப்போது கலவரம் அடங்கவில்லை.
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
பக்ரைன் நாட்டில் மன்னர் ஷேக் அமீதுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் ஏற்பட்ட புரட்சியால் அந்த நாட்டு அதிபர் நாட்டை விட்டு ஓடினார். பக்கத்து நாடான எகிப்திலும் இதன் தாக்கம் ஏற்பட்டது. அங்கு அதிபர் முபாரக்குக்கு எதிராக மக்கள் 18 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் முபாரக் பதவி விலகிவிட்டார். இரு நாடுகளில் ஏற்பட்ட எழுச்சியால் ஆப்பிரிக்கா, மற்றும் அரபு நாடுகள் பலவற்றில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, அரபு நாடுகளான ஜோர்டான், சிரியா, சவுதி அரேபியா, ஏமன், பக்ரைன், ஈரான் ஆகிய 10 நாடுகளில் கலவரம் பரவி உள்ளது. இதில் லிபியா, பக்ரைன், ஈரான், ஏமன், ஆகிய நாடுகளில் கலவரம் மோசமாக வெடித்துள்ளது. சவுதி அரேபியாவில் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.பக்ரைன் நாட்டில் மன்னர் ஷேக் அமீதுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒருவர் பலியானார். அவரது இறுதி ஊர்வலம் மனாமா நகரில் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அப்போது கலவரம் அடங்கவில்லை.
இதனால் ரப்பர் குண்டுகள் மூலம் சுட்டனர். இதில் 2 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் முற்றிலும் விரட்டி அடிக்கப்பட்டனர். என்றாலும் அவர்கள் ஆங்காங்கே திரண்டு நின்று அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. அனைத்து இடங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
அரபு நாடுகள் பலவற்றில் மன்னர்கள் அல்லது அதிபர்கள் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதால் அரபு நாடுகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக