சனி, 5 பிப்ரவரி, 2011

விசாரணையின் போது மோடி கூறியதெல்லாம் பொய்

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட குற்றங்களில் பங்குள்ளதாக கண்டறியப்பட்ட குஜராத் முதல்வர் மோடி விசாரணையின்போது தெரிவித்ததெல்லாம் பொய் என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் (SIT Report) கூறியுள்ளது. ஆதாரங்களை முன்வைத்து கடந்த மார்ச் 28-ஆம் தேதி எஸ்.ஐ.டி காந்திநகர் அலுவலகத்தில் வைத்து விசாரணை அதிகாரி எ.கெ.மல்கோத்ரா கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் மழுப்பியும், மறந்துவிட்டதாக நடித்தும், பொய்களைக் கூறியும் நழுவினார் என எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.
கவ்ரவ் யாத்திரையின் ஒருபகுதியாக கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி மெஹ்ஸானா மாவட்டத்தில் பெச்சாரியில் மோடி நிகழ்த்திய உணர்ச்சியைத் தூண்டும் உரையின் ஆவணத்தை மேஜையின் வைத்துவிட்டு இதனைக் குறித்து மோடியிடம் மல்கோத்ரா கேள்வி எழுப்பினார்.

"ஏன் சகோதரர்களே நாம் அகதி முகாம்களை திறக்கிறோம்?குழந்தைகளை உற்பத்திச் செய்யும் மையங்களை திறக்கத்தான் வேண்டுமா? நாம் முன்னேற்றமடைய குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமா? நமக்கு ஐந்து அவர்களுக்கு இருபத்தி ஐந்தாகும். அவர்களை இதிலிருந்து விலக்கவேண்டும். அந்த மதத்தினரை நம்முடைய வழியில் கொண்டுவர வேண்டும். ஏன் ஏழைகளுக்கு பணம் சென்று சேரவில்லை?" -இந்த உரையின் பகுதியைத்தான் மோடியின் முன்னால் வைத்துவிட்டு இந்த உரை முஸ்லிம்களுக்கு எதிரானது அல்லவா? என்பது மல்கோத்ராவின் கேள்வியாகும். இது அரசியல் ரீதியான உரை என மோடி மழுப்பியுள்ளார்.

கோத்ரா கலவரத்தில் தேசம் நடுங்கி நிற்கும் வேளையில் அடிக்கு பதிலடி உண்டாகும் என 2002 மார்ச் ஒன்றாம் தேதி 'ஸீ' டி.விக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியதைக் குறித்து அடுத்த வினா தொடுக்கப்பட்டது.

கோத்ரா பகுதியிலுள்ளவர்கள் கிரிமினல் குணத்தைக் கொண்டவர்கள். ஏற்கனவே அவர்கள் ஒரு டீச்சரை கொலைச் செய்துள்ளனர். அதற்கு பதிலடிதான் அவர்கள் அனுபவிக்கிறார்கள் என தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மோடி, தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து எட்டு ஆண்டுகள் கழிந்துள்ளதால் அன்று உபயோகித்த வார்த்தைகள் ஞாபகத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.

கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மழுப்பலான நழுவும் விதமான பதில்களை கூறியுள்ளார் மோடி.

மோடிக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவுச் செய்ய எஸ்.ஐ.டியால் முடியவில்லை.

கோத்ரா கலவரத்தில் அமைச்சர்களின் பங்கு, சில போலீஸ் அதிகாரிகளின் தலையீடு, வி.ஹெச்.பி, பா.ஜ.க தலைவர்களுடன் மோடி நடத்திய உரையாடல், குல்பர்க் சொசைட்டி கொடூர கூட்டுப் படுகொலையின் வேளையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி மோடியை அழைத்து உதவித் தேடியது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு மோடி தவறான பதில்களை அளித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக