சனி, 5 பிப்ரவரி, 2011
கறுப்பு பணம்: இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டது தெகல்கா.
ஜெர்மனி வங்கியில் கறுப்பு பணம் வைத்திருக்கும் 15 இந்தியர்களின் பட்டியலை தெகல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் 18 பேரின் பெயர்கள் அடங்கிய ரகசிய பட்டியலை ஜெர்மன் அரசு அண்மையில் வெளியிட்டது. இந்த விவரம் அடங்கிய பட்டியலை கவரில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனி வங்கியில் கறுப்பு பணம் போட்டிருக்கும் 18 பேரில் 15 பேரின் பெயர் பட்டியலை தெகல்கா என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் மனோஜ் துபுலியா, ருபால் துபுலியா, மோகன் துபுலியா, ஹஸ்முக்காந்தி, சிந்தன்காந்தி, திலீப் மேத்தா, அருண் மேத்தா, அருண் கோசார், குன்வாந்தி மேத்தா, ரஜினிகாந்த் மேத்தா, பிரபோத் மேத்தா, அசோக் ஜெபுரியா, ராஜ் பவுண்டேசன், ஊர்வசி பவுண்டேசன், அம்பூர்வனா அறக்கட்டளை ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
0 comments:
கருத்துரையிடுக