ஞாயிறு, 6 மார்ச், 2011

லிபியாவில் இருந்து 12,000 இந்தியர்கள் மீட்பு.

லிபியாவில் உள்ள ஒட்டுமொத்த இந்தியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இன்று இரவிற்குள் மீட்கப்ப‌ட்டு‌விடுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. லிபியாவில் மொத்தம் 18,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் 2,300 பேர் நேற்று வரை வந்து மீட்கப்பட்டனர். இந்நிலையில், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களும், ஒரு கப்பலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையில் இன்று இரவிற்குள் அங்குள்ள இந்தியர்களில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 12,000 பேர் மீட்கப்பட்டுவிடுவர் என்றும் அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
மீதமுள்ளவர்கள் தொடர் நடவடிக்கைகளின் மூலம் இன்றும் ஒரு சில நாட்களில் மீட்கப்பட்டுவிடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக